இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்த எஸ், தரைக்குடியில் அமைந்துள்ள ஸ்ரீ உமையநாயகி அம்மன் கோயிலில் தான் ஆடி மாதம் முழுவதும் நடை சாத்தப்படுவது பல வருடங்களாக வழக்கத்தில் இருந்து வருகிறது. இந்த வருடமும் ஆடி மாதப் பிறப்பையொட்டி நேற்றிரவு சாயல்குடி அருகே ஸ்ரீ உமையநாயகி அம்மன் கோயில் நடை சாத்தப்பட்ட உள்ளது
ஆடி மாதம் நிறைவடைந்த பின்னர் தான் கோயில் நடைத் திறக்கப்படும். இது குறித்து எஸ்.தரைக்குடி கிராம மக்கள் பேசும் போது, இந்தக் கோயில் பல்வேறு கிராமத்தினருக்கு குலதெய்வமாக இருந்து வருகிறது. மூலவரான உமையநாயகி அம்மன் மேற்கூரையின்றி திறந்த வெளியில் வீற்றுள்ளார்,
ஆடி மாதத்தின் முதல் நாளில் உமையநாயகி இங்கிருந்து இராமேஸ்வரம் சென்று அங்கு அக்னித் தீா்த்தம் உள்ளிட்ட புனித நீா்நிலைகளில் நீராடி, திரும்ப ஆவணி மாதம் முதல் நாள் கோயிலுக்கு திரும்புவதாக ஐதீகம். எனவே ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் முழுவதும் கோயில் நடை சாத்தப்பட்டு, ஆவணி மாதத்தின் முதல் நாளில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் பல்வேறு கிராமத்தில் இருந்தும் திரளான பக்தா்கள் வந்து கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்தனர்.