தேனி மாவட்டத்தில் முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி விவசாயிகள் கவலை தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி வருச நாடு ஆகிய பகுதிகளுக்கு அடுத்தபடியாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் பரவலாக முருங்கை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக முருங்கைக்காயை தரம் மாற்றி உலகளாவிய அளவில் வணிகம் செய்வதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் தற்போதைய தட்பவெப்ப நிலை முருங்கை சாகுபடிக்கு சாதகமாக இருப்பதால் அதிக அளவில் முருங்கைக்காய் விளைச்சல் ஏற்பட்டுள்ளது இதனால் கடந்த மாதம் கிலோ ரூபாய் 80 க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் படிப்படியாக சரிந்து தற்போது ரூபாய் கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது இந்த விலை வீழ்ச்சியால் முருங்கைக்காய் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.