திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ( ம) வன உயிரின காப்பாளர் கொடைக்கானல்,உதவி வன பாதுகாவலர் கொடைக்கானல் அவரது உத்தரவு படி பழனி – கொடைக்கானல் சாலை தேக்கந்தோட்டம் வனசோதனை சாவடி பகுதியில் பழனி வனச்சரக அலுவலர் தலைமையில் கல்லூரி மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு நெகிழி ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தபட்டது
இந்நேர்வில் பழனியை சேர்ந்த வேலன் விகாஸ் பள்ளி தாளாளர், ஆசிரியர்கள் மாணவர்கள், பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பாலாசமுத்திரம் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி விழிப்புணர்வு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது
பள்ளி கல்லூரி மாணவர்கள்,வன பணியாளர்கள் இணைந்து பழனி – கொடைக்கானல் சாலையின் ஓரங்களில் நெகிழிகளை சேகரித்து பாலசமுத்திரம் பேரூராட்சியில் ஒப்படைக்கப்பட்டது.