மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் தொகுதியில் தனது பிரசாரத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார்.
இதனையடுத்து கும்பகோணம் தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதலைமையில் மாற்றுக் கட்சியினர்
அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ், அமைப்பு செயலாளர் மனோகரன், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பி. எஸ். சேகர், கிழக்கு மாவட்டச் செயலாளர், பாரதிமோகன், மாநகர செயலாளர் ராம.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில்மாற்றுக் கட்சியில் இருந்து ஆயிரக்கனக்கான ஆண்கள், திரளான பெண்கள் மற்றும் திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் சதீஷ் மற்றும் பாலமுருகன்
தலைமையில் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்தவர்களை பொதுச்செயலாளர்
எடப்பாடி பழனிசாமி அனைவரையும் வரவேற்று அ.தி.மு.க. துண்டுகளை அணிவித்து கட்சியில் இணைத்து கொண்டார்.
அப்போது அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
பல்வேறு கட்சியில் இருந்து 2000 பேர் இணைந்துள்ளனர்.அனைவரையும் இந்த இணைப்பு விழாவில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
எம். ஜி. ஆர். தொடங்கப்பட்டு ஜெயலலிதா என்கிற மாபெரும் தெய்வ சக்தி ஆகிய இருவரின் அருள் ஆசியுடன் அதிமுக பொன்விழா கண்டு உள்ளது. தமிழகத்தில்
சுமார் 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து உள்ளது. ஏழை மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய ஆட்சிதான் அதிமுக விவசாயிகள் தொழில் நிறைந்த தஞ்சை மாவட்டம் விவசாயிகளுக்கு ஏராளமான நன்மைகள் செய்து இருந்தது அதிமுக ஆட்சியில் தான்.
வருகிற 8 மாத ஆட்சி காலத்தில் எந்த திட்டங்களும் தி.மு.க நிறைவேற்றாது.
எழுச்சியாக நடைப்பெற்ற இணைப்பு விழாவில் எம்ஜிஆர் சதீஷ் , பாலமுருகன் ஆகியோர்க்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற அனைவரும் உழைத்து அ.தி.மு.க ஆட்சியில் அமர வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சோழபுரம் அறிவழகன், ஏ.வி.கே. அசோக்குமார், பகுதி செயலாளர்கள் பத்மகு மரேசன், பி.எஸ்.ரமேஷ் பாபு, ராஜு, தகவல் தொழில் நுட்ப மண்டல செயலாளர் அறிவொளி, தலைமை செயற் குழு உறுப்பினர் கவிதா ஸ்ரீதர், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.