கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கல்லூரி சந்தை நிகழ்ச்சி தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் கல்லூரி சந்தை நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்
தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் இணைந்து நடத்தும் கல்லூரி சந்தை தொடக்க விழா நிகழ்ச்சியை தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்
கல்லூரி நிறுவனச் செயலாளர் கம்பம் என்.இராமகிருஷ்ணன் எம் எல் ஏ மற்றும் தேனி மாவட்ட தமிழ்நாடு மாநில அரசு ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குனர் பெ. சந்திரா ஆகியோரின் தலைமையில் கல்லூரி இணை செயலாளர் ஆர் வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் ஆகியோர் முன்னிலையில் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா மற்றும் துணை முதல்வர் டாக்டர் வி வாணி ஆகியோர் கலந்து கொண்டனர்
கல்லூரி சந்தையில் தேனி மாவட்ட அனைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி கல்லூரி கலையரங்கத்தில் நடத்தப்பட்டது இதில் மூங்கில் கடைகள் கைவினைப் பொருட்கள் நவதானியங்களால் செய்யப்பட்ட சிற்றுண்டிகள் அரசு சாதனை பொருட்கள் ஹோம் மேட் சாக்லேட் வகைகள் காட்டன் சேலைகள் காட்டன் மற்றும் சுடிதார் ரகங்கள் போன்ற பலவிதமான பொருட்களைக் கொண்டு வந்து 75க்கும் மேற்பட்ட விற்பனையகங்கள் அமைத்து விற்பனை செய்தார் மேலும் இது மாணவிகளின் விற்பனை திறனை மேம்படுத்தும் விதமாகவும் தொழில் முனைவோருக்கான சிறந்த பயிற்சியாகவும் அமைவதுடன் மாணவிகளுக்கு பயனுள்ளதாகவும் அமைந்தது. இந்த நிகழ்ச்சியை இண்டர்பிர்னர்ஷிப் டெவலப்மெண்ட் செல் காம்பரனர் இன்கூப்ஷன் சென்டர் உறுப்பினர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.