தருமபுரி அடுத்த நூலஹள்ளி கிராமத்தில் இருந்து தருமபுரி நோக்கி வந்த, 40 அரசு பேருந்தை தேவராஜ் என்பவர் இயக்கி வந்துள்ளார். அப்பொழுது உழவன்கொட்டாய் அருகே வந்தபோது திடீரென ஸ்டேரிங் கட்டானதால், ஓட்டுனரின் கட்டுப்பாட்ட இழந்த பேருந்து சாலை அருகில் இருந்த ராமு என்பவரது வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அரசு பேருந்து முன்பக்கம் முழுவதும் உடைந்து நொறுங்கியது. இந்த விபத்தில் வீட்டில் உள்ள இருந்த கொண்டிருந்த, நரசிம்மமன்-சோனியா தம்பதியின் மகள் சிறுமி அத்விகா மற்றும் பேருந்து ஓட்டுநர் தேவராஜ் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் சிறுமி மற்றும் ஓட்டுநர் இருவரையும் மீட்டு 108 மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் படுகாயம் அடைந்த சிறுமி அத்விகா, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெரும்பாலும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் பேருந்துகள் காலாவதியான பேருந்துகளாக இருப்பதால், அடிக்கடி இது போன்ற விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே பழைய பேருந்துகளை மாற்றி, விபத்துக்கள் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.