கோவை
வாரிசு இல்லாததை அறிந்து உயிரிழந்த மனைவியின் 80 பவுன் நகை,வங்கி லாக்காரில் இருந்து கையாடல் – மீட்டு தர கோரி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் எஸ்பி அலுவலகத்தில் புகார்..
உயிரிழந்த தனது மனைவியின் 80 பவுன் நகையை மீட்டுத் தரக் கோரியும் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கும் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கோவை சுல்தான்பேட்டையை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் முருகேசன். இவரது மனைவி சாந்தினி சமீபத்தில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், மனைவி சாந்தினி உயிரிழப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், அதேபோல வாரிசு இல்லாததை அறிந்த உறவினர்கள் மனைவி சாந்தியின் பெயரில் வங்கியின் பாதுகாப்பு அறையில் வைத்திருந்த 80 பவுன் நகையை கையாடல் செய்துள்ளதாகவும்,வீட்டிலிருந்த பொருட்களையும் திருடி சென்று விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தொடர்ந்து தனக்கு கொலை மிரட்டல் விடுக்கும் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பாதுகாப்பு வேண்டியும் ,80 பவுன் நகையை மீட்டுதர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.