துறையூர் ஜூலை -23
திருச்சி மாவட்டம் துறையூர் ஆத்தூர் ரோடு கோவிந்தாபுரம் பிரிவு சாலையில் பால் வேன் மின்சார கம்பத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது.
(ஜுலை-22) 3 மணி அளவில் உப்பிலியபுரத்தில் இருந்து ஜிவி பால் வேன் அதி வேகமாக வந்து கொண்டிருந்தது.அப்பொழுது கோவிந்தபுரம் பிரிவு சாலையில் கிருஷ்ணாபுரம் சுரேஷ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் கோவிந்தபுரம் திரும்பும் போது உப்பிலியபுரத்திலிருந்து அதிவேகமாக வந்த ஜீவி பால் வேன் அவர் மீது மோதாமல் இருக்க இடது புறம் திருப்பிய போது எதிர்பாராத விதமாக நடுரோட்டில் இருந்த மின்சார கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் மின்சார கம்பம் 10 அடிக்கு மேல் இழுத்துச் சென்று வேனில் சாய்ந்த நிலையில் இருந்ததால் பெரு விபத்து தவிர்க்கப்பட்டது. ரோட்டில் சாய்ந்து இருந்தால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருப்பார்கள்.இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த சுரேஷ் ,பால் வேன் டிரைவர் சிதம்பரம் ஆகியோர் சிறிய காயங்களுடன் உயிர்த்தப்பினர்.கிளினர் ராஜ் காயம் இன்றி தப்பினார். சம்பவ இடத்துக்கு வந்த துறையூர் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிந்தாபுரம் நான்கு வழி சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் பேரிகார்ட் அமைக்க வேண்டும் அல்லது வேகத்தடை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்