திண்டுக்கல்லில் அமாவாசையை முன்னிட்டு 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திர. கரையில் 300க்கும் மேற்பட்டோர் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். தர்ப்பணம் கொடுக்க ஏற்ற நல்ல நேரம் அமாவாசை என்பது முன்னோர்களின் ஆசிகளை பெற்று, பலவிதமான துன்பங்கள், தோஷங்கள், சாபங்களில் இருந்து விடுபடுவதற்கான மிக முக்கியமான நாளாகும்.அதிலும் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை, முன்னோர்களின் ஆசிகளையும், பெரும் புண்ணியங்களையும் நம்முடைய சந்ததிகளுக்கு பெற்றுத் தரும் உன்னதமான நாளாகும்.
ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்த ஆண்டு ஆடி அமாவாசையில் எந்த நேரத்தில் தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஆடி மாத அமாவாசை, தெய்வங்களின் அருளையும், முன்னோர்களின் ஆசியையும் பெறுவதற்கான மிக முக்கியமான நாளாகும். தட்சணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசைக்கு தனி சிறப்பு உண்டு. இந்த நாளில் தான் பித்ருலோகத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்கள், பூமிக்கு நேரடியாக வருவதாக ஐதீகம்.ஆடி அமாவாசையில் நாம் செய்யும் தர்ப்பணம், திதி, தானம் ஆகியவற்றை முன்னோர்கள் நேரடியாக வந்து பெற்றுக் கொள்வதாக நம்பிக்கை. அதனால் முன்னோர்களின் மனங்களை மகிழ்வித்து, ஆசிகளை பெறுவதற்காக இதனை செய்து வருகின்றனர்.