கந்தர்வக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சர்வதேச செஸ் தினத்தை முன்னிட்டு செஸ் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வினை தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தொடங்கி வைத்தார்.
போட்டியின் நடுவர்களாக ஆசிரியர்கள் மணிமேகலை, சிந்தியா உள்ளிட்டோர் செயல்பட்டனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா உலக செஸ் தினம் குறித்து பேசும்பொழுது
உலக சதுரங்க தினம் 1924 ஆம் ஆண்டு பாரிஸில் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பால் நிறுவப்பட்ட தேதியைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 ஆம் தேதி உலக சதுரங்க தினம் உலகளவில் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில், 20 மற்றும் 21 ஆம் நூற்றாண்டுகளில் சதுரங்கம் என்றால் நினைவுக்கு வருபவர் விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே என்றால் அது மிகையாகாது. சென்னையைச் சேர்ந்த வீரரான ஆனந்த் 1988 இல் இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டராக இருந்தார், பின்னர் ஐந்து முறை உலக சாம்பியனானார்.
இவரின் வெற்றியால் இளம் இந்தியர்கள் விளையாட்டைத் தொடர கதவைத் திறந்தது.
அவரைத் தொடர்ந்து ஆர். பிரக்ஞானந்தா, டி. குகேஷ், அர்ஜுன் எரிகைசி, நிஹால் சரின் மற்றும் வைஷாலி ரமேஷ்பாபு போன்ற இளம் வீரர்கள் விளையாடி வருகிறார்கள்.
2025 ஆம் ஆண்டு உலக சதுரங்க தினத்திற்கு குறிப்பிட்ட கருப்பொருள் எதுவும் இல்லை. அனைவருக்கும் சதுரங்கத்தை கற்பிப்பதே ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை விட உலக சதுரங்க தின 2025 குறிக்கோளாகும். ஒவ்வொரு ஆண்டும், உலக சதுரங்க தினத்தை கௌரவிக்க அதே கருப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.
சதுரங்கம் என்பது ஒரு உலகளாவிய விளையாட்டு, இது நியாயம், உள்ளடக்கிய தன்மை மற்றும் மற்றவர்களுக்கு மரியாதை ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. இந்த விஷயத்தில் இது குறிப்பிடத்தக்கது, ஏனெனில் இது சகிப்புத்தன்மை உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுக்கிறது என்று பேசினார்.
சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் சிவகார்த்திகேயன், யோகேஷ், பிரியதர்ஷினி, லத்திகா உள்ளிட்டோரை தலைமையாசிரியர் பாராட்டினார்
. அனைத்து மாணவர்களும் சதுரங்க போட்டியை கற்றுக்கொண்டு விளையாட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.