மேட்டுப்பாளையம் சாலை வடகோவை சிந்தாமணி சந்திப்பில் கோவை மாநகராட்சியின் சார்பாக அமைக்கப்பட்ட இந்தியாவின் தேசிய விலங்கான புலி உருவ சிலை திறப்பு விழா நடைபெற்றது..

12 அடி நீளத்தில் 900 கிலோ எடையுடன் முன்னங்கால்களைத் தூக்கிப் பாயும் நிலையில் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ள இச்சிலை திறப்பு விழாவில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் கலந்து கொண்டு சிலையைத் திறந்து வைத்தார்.

இவ்விழாவில் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவணசுந்தர் , தமிழ்நாடு வனமேம்பாடு மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக இயக்குநரும் வனப் பாதுகாவலர் மற்றும் கள இயக்குநருமான வெங்கடேஷ் மாவட்ட வனஅலுவலர் ஜெயராஜ் மற்றும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சவாசுகி ஆகியோர் பங்கேற்றனர்.

சிலையை நிறுவுதல் மற்றும் பராமரித்தலுக்கான பொறுப்பையும் செலவையும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி ஏற்றுக்கொண்டுள்ள குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஜூலை 29 ஆம் தேதி உலகப் புலிகள் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதனை நினைவுகூரும் வகையில் இச்சிலை திறக்கப்பட்டுள்ளது பொருத்தமாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *