ராமநாதபுரம் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகின்ற ஆகஸ்ட்மாதம் வருகை தரும் திராவிட மாடல் நாயகர் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை குறித்தும் மற்றும் ஓரணியில் தமிழ்நாடு உள்ளிட்ட 12-தீர்மானங்களை நிறைவேற்றும் ராமநாதபுரம் மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது
இந்த கூட்டத்திற்கு தமிழக வனம் கதர்வாரியத்துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள்,சத்திய மூர்த்தி சுந்தர்ராஜன் அன்வர்ராஜா மற்றும் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மற்றும் மாநில,மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் கழக நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்றனர் மேலும்
திமுக தலைவரின் வருகையின் போது செய்யவேண்டிய பணிகள் ஓரணியில் உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவற்றை பற்றி பல்வேறு ஆலோசனைகளை வழங்கி ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர்காதர்பாட்சா முத்துராமலிங்கம் உரையாற்றினார்