கே வி முகமது அரியலூர் செய்தியாளர்:-
அரியலூரில் நடந்தது தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அரியலூர் மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார் மாவட்ட இணை செயலாளர் அருந்தவசெல்வி அனைவரையும் வரவேற்பு பேசினார்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வேல்முருகன் தொடக்க உரையாற்றினார் மாவட்ட செயலாளர் வசந்தா கோரிக்கை விளக்க உரையாற்றினார் மாநில செயலாளர் மணிமேகலை சிறப்புரையாற்றினார் ஊரக வளர்ச்சி துறை மாநில செயலாளர் ஷேக் தாவூத் நிர்வாகிகள் ராகவன் காந்தி மாநில அமைப்பு செயலாளர் ராஜராஜன் நிறைவுறையாற்றினார்
பி கே செல்வகணபதி ரவி அசோகன் வேம்பு ராணி வேல்முருகன் செந்தில் குமார் தேன்மொழி பகுத்தறிவு ஆகியோர் போராட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்கள். மாவட்ட பொருளாளர் வசந்தகுமார் அனைவருக்கும் நன்றி கூறினார்
காலியாக உள்ள 700 மருந்தாளுநர் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் மாவட்ட சுகாதார அலுவலக மருந்து கிடங்கிர்க்கு தலைமை மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது