சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பொதுமக்கள் பெண்கள் ஆர்வத்துடன் முகாமில் பங்கேற்பு உடனுக்குடன் தீர்வு
எண்ணூர் அன்னை சிவகாமி நகர் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் 15 துறைகளின் 46 சேவைகளும் நகர்ப்புற பகுதிகளில் 13 துறைகளின் 43 சேவைகளும் வழங்கப்படுகிறது இந்த திட்டம் மாநிலம் முழுவதும் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி திருவெற்றியூர் மண்டலம் எண்ணூர் 3 வது வார்டு மாமன்ற உறுப்பினர் தம்பையா (எ) தமிழரசன் ஏற்பாட்டில் பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டான்லின் திட்டம் சிறப்பு முகாம் நடைப்பெற்றது
சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 3 வது வட்டத்தில் பர்மா தமிழர்கள் வசிக்கும் அன்னை சிவகாமி நகரில் தமிழக அரசின் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்ட முகாமில் ஆயிரக்கணக் கான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
இந்த முகாமில் மாவட்ட கழக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ கே.பி.சங்கர் எம் எல் ஏ மண்டல குழு தலைவர் தி.மு. தனியரசு மண்டல உதவி ஆணையர் விஜயபாபு திமுகநிர்வாகிகள் தி.நகர் மோகன் வை.ம.அருள் தாசன் லயன் வி.தியாகராஜன் பி.தமிழரசன் உட்பட ஆகியோர் பார்வையிட்டு பொது மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து தேவையான உதவிகளை உடனடியாக செய்து கொடுக்க அதிகாரியிடம் கேட்டுக் கொண்டதோடு கலைஞர் உரிமைத்தொகை , ஜாதி சான்றிதழ் , ஆதார் கார்டு ரேஷன் கார்டில் பெயர் நீக்குதல் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட சான்றிதழ்களை உடனடியாக பொதுமக்களுக்கு வழங்கினார்கள்
13 துறைகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர் பரிசீலனை செய்யப்பட்டு உடனுக்குடன் திருத்தம் செய்யப்பட்டு உடனுக்குடன் தீர்வு கண்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது