குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வினாடி, வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வினாடி, வினா போட்டி நடைபெற்றது. போட்டியானது மூன்று தலைப்புகளில் ஒவ்வொரு தலைப்பிற்கும் 10 மதிப்பெண்கள் என்ற விகிதத்தில் 30 மதிப்பெண்களுக்கு நடைபெற்றது. நிகழ்ச்சி தொகுப்பை தமிழ் ஆசிரியர் இருதயராஜ் வழி நடத்தினார். ஆசிரியர்கள் புஷ்பராஜ் மற்றும் ரமாதேவி ஆகியோர் மாணவர்களிடையே வினா எழுப்பி மதிப்பெண்களை பதிவு செய்தனர். இறுதியில் வினாடி, வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயவேல் பரிசுகளை வழங்கி பாராட்டினார். முடிவில் கணித பட்டதாரி ஆசிரியை சாந்தி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.