மதுரை மாநகராட்சி மண்டலம் 5 வார்டு 71,74 பழங்காநத்தம் மாநகராட்சி சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுவதை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பார்வையிட்டார். உடன் மேயர் இந்திராணி மற்றும் மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், ஆகியோர் உள்ளனர்.
முதலமைச்சர், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாமினை கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைத்து உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
ம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மதுரை மாநகராட்சியில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் தொடங்கப்பட்டு ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதனை தொடர்ந்து மதுரை மாநகராட்சி மண்டலம் 1 (வார்டு எண்.8, 11) மாநகராட்சி (கிழக்கு) அலுவலகம் சர்வேயர் காலனி, மண்டலம் 2 (வார்டு எண்.1, 2) புகழ் கல்யாண மகால், புதுவிளாங்குடி, மண்டலம் 3 (வார்டு எண்.52) பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள சுற்றுலா தகவல் மையம் மற்றும் மண்டலம் 5 வார்டு 71 ,74 பழங்காநத்தம் மாநகராட்சி சமுதாயக்கூடம் ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதனை அமைச்சர் மூர்த்தி பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறுவதை பார்வையிட்டு கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் மாநகர காவல் ஆணையர் லோகநாதன், துணை மேயர் நாகராஜன், உதவி ஆணையர்கள் பி.எஸ்.மணி, ரவிக்குமார் உட்பட அனைத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.