டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு செய்தி எதிரொலியாக செம்மங்குடி பகுதியில் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள செம்மங்குடி பகுதியில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தண்ணீர் வெளியேறி வந்துள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்த செய்தி டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு இல் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.