தமிழ்நாடு அரசு பொது நூலக துறையின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்ப்பேட்டையில் இயங்கி வரும் கிளை நூலகத்தை பயன்படுத்தி குரூப் 2 தேர்வு எழுதி வெற்றி பெற்று அரசுப் பணி ஆணை பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

வாசகர் வட்டக் குழு துணைத்தலைவர் இளங்கவி சண்முகம் தலைமை தாங்கினார் வாசகர் வட்டப் பொருளாளர் வீர.சந்திரமோகன் வரவேற்றுப் பேசினார் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆ.குமார், வே.முருகன், நூலகப் புரவலர் மு.கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மணலூர்ப்பேட்டையைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் இந் நூலகத்தை பயன்படுத்தி பலர் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதினர் இதில் குரூப் 2 தேர்வில் வெற்றிப் பெற்று வனத்துறையில் மு.சுரேந்தர் வன அலுவலராகவும், குரூப் 4 தேர்வெழுதி ஊரக வளர்ச்சித் துறையில் ச.சேவியர் இளநிலை உதவியாளராகவும், இந்து சமய அறநிலையத் துறையில் ராஜாத்தி செயல் அலுவலராகவும் பணியில் சேர்ந்துள்ளனர்.

அரிமா மற்றும் வர்த்தகர் சங்கங்கள் சார்பில் அரிமா து.சண்முகம் அனைவருக்கும் பயனாடை அணிவித்து பாராட்டி பேசினார் நல்நூலகர் மு.அன்பழகன் நூல்களை பரிசாக வழங்கி சிறப்புரையாற்றினார் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள், நூலகப் புரவலர்கள், வாசகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நூலகப் பணியாளர் கி.பாஸ்கரன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *