பாரத பிரதமர் மோடி அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை இரவு தூத்துக்குடியில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வருகை புரிந்து திருச்சியில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதி மாரியாட்டில் பிரதமர் மோடி தங்க உள்ளார். நாளை மறுநாள் கங்கைகொண்ட சோழபுரம் செல்கிறார். பிரதமர் தங்கும் நட்சத்திர விடுதி போலீசார் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு ஆறடுக்கு பாதுகாப்பில் உள்ளது மேலும் அருகில் உள்ள இல்லங்கள் மற்றும் கடைகளிலும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு பலத்த பாதுகாப்பை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்
திருச்சி செய்தியாளர் அருள் மோகன்