தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் செங்கிப்பட்டி அருகில் ஆனந்தம் சட்ட கல்லூரி திறப்பு விழா.
டெல்டா மாவட்ட மக்கள் முன்னேற்றத்திற் காக பல்வேறு கல்வி பணிகளை செய்து வரும் ஶ்ரீ ராகவேந்திரா கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆனந்தம் சட்ட கல்லூரியை இந்திய உச்ச நீதி மன்ற நீதியரசர் ஆர்.மகாதேவன் திறந்து வைத்தார்
விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் ஹரிராமன் வரவேற்புறையாற்றினார், கல்லூரியின் முதன்மை ஆலோசகர் டாக்டர் இனியன் மற்றும் கல்லூரி தாளாளர் டாக்டர் இன்பன் ஆகியோர் கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து விளக்கவுரை நிகழ்த்தினர். தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் தலைமை வகித்தார்.
கல்லூரியை திறந்து வைத்த இந்திய உச்ச நீதிமன்ற நீதியரசர் ஆர்.மகாதேவன் சிறப்புரையாற்றி பேசியதாவது, தமிழர் பாரம்பரியமும் சோழ மண்டலமும் நீதி மற்றும் நெறி சார்ந்த வாழ்வியல் முறைக்கு உலகிற்கு வழிகாட்டியாக திகழ்கிறது. சட்டம் பயிலும் மாணவர்களும், வழக்கறிஞர்களும் தாங்கள் கற்ற சட்ட கல்வியின் மூலம் நீதிக்கு துணை நிற்க வேண்டும்.
உலக நீதி நூலாம் திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கியங்கள் காட்டும் வழியில் செயல்பட்டு இந்த மண்ணும் மக்களும் பயனுற பாடுபட வேண்டும். அனுபவம் மிக்க ஆசிரியர்களும் மூத்த வழக்கறிஞர்களும் இளைய தலைமுறையினருக்கு நல்வழி காட்ட வேண்டும்.மக்கள் நலனுக்காக போராடும் மகத்தான சட்ட வல்லுனர்களை உருவாக்குவதில் ஆனந்தம் சட்ட கல்லூரி ஒரு முன்மாதிரியாக திகழ வேண்டும் என வாழ்த்தி பேசினார்.
இவ்விழாவில் தஞ்சாவூர் திருச்சி மாவட்ட நீதிபதிகள் வழக்கறிஞர் பெருமக்கள், முக்கிய பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள், சட்ட மாணவர்கள் பொதுமக்கள் என 5000க்கும் மேலனோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆனந்தம் சட்ட கல்லூரி நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். ஆனந்தம் சட்ட கல்லூரி பேராசிரியர் வைரமணி நன்றியுரை கூறினார்.