பிறந்த நாள் விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லிலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் பிறந்த நாள் விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா தலைமையிலும், நடிகர் மீசை மனோகரன், நடிகர் அப்பா பாலாஜி முன்னிலையிலும் விழா நாயகன் கேக் வெட்ட நடிகை முனீஸ் கேக் ஊட்டி வாழ்த்துக்கள் கூறினார். விழாவில் நடிகர்கள், நடிகைகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் கூறினார்கள்