குடவாசலில் திருவாரூர் வடக்கு மாவட்ட பாமக சார்பில் வருகின்ற ஆகஸ்ட் 10- ந்தேதி பூம்புகாரில் நடைபெற உள்ள வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தனியார் திருமண மண்டபத்தில் திருவாரூர் வடக்கு மாவட்ட பாமக சார்பில் வருகின்ற ஆகஸ்ட் 10- ந்தேதி பூம்புகாரில் நடைபெற உள்ள வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திருவாரூர் வடக்கு மாவட்ட பாமக செயலாளர் வேணு. பாஸ்கரன் தலைமை வகித்தார். வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் கணேச. சண்முகம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
வடக்கு மாவட்ட பாமக தலைவர் பி.எஸ். பழனி, உழவர் பேரியக்கத்தின் மாவட்ட செயலாளர் உலகநாதன், மாவட்ட தலைவர் ராஜா, பாமக மாவட்ட பொருளாளர் வி.லதா, சமூக ஊடக பேரவை மாவட்ட செயலாளர் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில வன்னியர் சங்க தலைவர் பு. தா. அருள்மொழி சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வலஙகை என். மாரிமுத்து, மாவட்ட துணைச் செயலாளர்கள் வலங்கை எம்.எம். சண்முகவேல், வே. மணிகண்டன், உழவர் பேரியக்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் வலங்கை சத்யா ( எ) கலியபெருமாள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாய கடன்களை உடனடியாக ரத்து செய்திட வேண்டும், விவசாய பணிகளுக்கு தங்குதடையின்றி தண்ணீர் கிடைக்க அனைத்து வாய்க்கால்களையும் உடனடியாக தூர் வார வேண்டும். பூம்புகாரில் நடைபெற உள்ள வன்னியர் மகளிர் பெருவிழா மாநாட்டிற்கு சுமார் 100 வாகனங்களில் சென்று பங்கு பெறுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்ட முடிவில் குடவாசல் நகர செயலாளர் இளங்கோவன் அனைவருக்கும் நன்றி கூறினார்.