மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட காவிரிநீர் இன்று காலை 7 மணி நிலவரப்படி முக்கொம்பு அணைக்கு 1,21,355 கனஅடியாக நீர்வரத்து உள்ளது. இதில் காவிரி ஆற்றில் 27,783 கனஅடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் 92,662 கனஅடி நீரும், கிளை வாய்க்கால்களில் 910 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையில்லாமல் ஆற்றில் இறங்கக்கூடாது என்றும், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்ணை
க. மாரிமுத்து.