கரூர் மாவட்ட செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.
எம்.கே.பாஸ்கரன் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு அளித்தார்.
கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக தொடர்ந்து நடைபெற்று வரும் ஆற்று மணல் கொள்ளை, கிராவல் மணல் கொள்ளை, அனுமதி இல்லாத குவாரிகள் உள்ளிட்ட அனைத்து கனிம வள கொள்ளைகளையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு
அதில் கூறியதாவது,
கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக தொடர்ந்து நடைபெற்று வரும் ஆற்று மணல் கொள்ளை, கிராவல் மணல் கொள்ளை, அனுமதி இல்லாத குவாரிகள் உள்ளிட்ட அனைத்து கனிம வள கொள்ளைகள் நடந்து வருகிறது.
ஒரு சில இடங்களில் காவல் துறை எடுக்கும் நடவடிக்கைகள் வெறும் கண் துடைப்பாகவே உள்ளது. அதனால் குற்றவாளிகள் தொடர்ந்து மீண்டும், மீண்டும் இது போன்ற கனிம வள கொள்ளைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு இடத்தில் பெற்ற அனுமதி சீட்டைப் பயன்படுத்தி கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல்அதிகாரிகளின் துணை கொண்டு இது போன்ற கனிம வள கொள்ளைகள் நடந்து வருகிறது.
ஒரு இடத்தில் கனிம வள கொள்ளை நடைபெற்று அவர்களுடைய வாகனங்கள் பரிமுதல் செய்யப்பட்ட பிறகும் அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயாமல் இருப்பதும் அவர்களுடைய குவாரி லைசன்ஸ் ரத்து செய்யப்படாமல் இருப்பதும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இது குறித்து ஆய்வு செய்து,சட்ட விரோத குவாரிகளை மூடவும், ஒரு பக்கம் பெற்ற அனுமதியை சட்ட விரோதமாக பயன்படுத்தி வேறு இடத்தில் மணல் மற்றும் கிராவல் மண் திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்கள் பெற்ற லைசன்ஸ்ஐ ரத்து செய்ய வேண்டும் என்றும் சம்மந்தப்பட்ட நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து கரூர் மாவட்டத்தில் உள்ள கனிம வளங்களை பாதுகாக்க வேண்டும் கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்