அஸ்ஸலாம் பொறியியல் கல்லூரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்-உயர்கல்வி துறை அமைச்சர் கோவி. செழியன் ஆய்வு
தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தஞ்சாவூர் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 2 ந் தேதி காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை ஆடுதுறை அருகே திருமங்கலக்குடி அஸ்-ஸலாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நடத்தப்பட உள்ளது.
இம்முகாமானது தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் சென்னை. திருப்பூர், கோவை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட நகரங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நர்சிங் மற்றும் பி.இ கல்வி தகுதிகளுக்குரிய வேலைதேடுவோரும் கலந்து கொள்ள உள்ளனர். தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பகுதிகளை சேர்ந்த தனியார்துறை நிறுவனங்கள், தொழிலாளர் நலத்துறை, தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தில் பதிவு செய்துள்ள நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
திருமங்கலக்குடி அஸ் – ஸலாம் பொறியல் கல்லூரியில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.அப்போது வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஆலோசனை வழங்கினார்.
அப்போது கல்லூரி அறக்கட்டளை நிறுவன நிர்வாகிகள் ஜமால் முகமது இப்ராஹிம், ஷாஜகான் சிராஜுதீன்,மாவட்ட அவைத்தலைவர் நசீர் அகமது ஒன்றிய செயலாளர்கள்சுந்தர ஜெயபால் கோ கா அண்ணாதுரை மாவட்ட இளைஞரணி நிர்வாகி ராஜா மற்றும் நிர்வாகஅலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.