சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் ரீகா ஹெர்பல்ஸ் அலுவலகத்தில் அதன் நிறுவனர் ஹனிபா செய்தியாளர்களை சந்தித்து புதியதாக தயாரிக்கபட்ட டயாபூஸ்டர் என்ற சர்க்கரை நோயை கட்டுபடுத்தும் கேப்ஸ்சூல் மாத்திரைகளை அறிமுகபடுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் ரீகா ஹெர்பல்ஸ் நிறுவனர் ஹனிபா பேசுகையில் ரீகா ஹெர்பல்ஸ் நிறுவனம் இரோஷியா ஆஃப்ரோ சாம்பர்ஸ் ஆப் காமர்ஸ் முலமாக தமிழ்நாடு, ஆப்பிரிக்கா, ஜார்ஜியா உள்ளிட்ட உலக நாடுகளில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில்லும் உலக சுகாதார கட்டுபாட்டிற்கு இணங்க இதனை செயல்படுத்துவதாக தெரிவித்தார். உணவு முலகூறுகளால் தயாரிக்கபட்ட கேப்ஸ்சூல்ஸ் எனவும் எந்தவித பக்க விளைவுகளையும் ஏறபடுத்தாது, இந்த மாத்திரைகளை உலகளாவிய சந்தை கொண்டு வருவதே எங்கள் நோக்கம் எனவும் 50 கோடி மதிப்பிலான வர்த்தகத்திற்கு ஆப்பிரிக்கா தனது தரப்பில் மாத்திரைகளை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தபட்ட பின்னர் 10 கோடி ரூபாய் காசோலையுடன் டயா பூஸ்டர் கேப்ஸ்சூல் வாங்குவதற்க்கான வர்த்தக கடிதத்தையும் வழங்கி உள்ளதாக தெரிவித்தார். மேலும் வெளிநாடுகளில் இருந்து மருத்துவ சுற்றுலாவிற்கு சிறந்த முறையில் தமிழ்நாடு சுற்றுலா துறை முலம் ஏற்பாடு செய்யபட்டு அவர்கக்கு தங்கும் இடம் உள்ளிட்ட வசதிகளை செய்து தருவதாக தெரிவித்தார். மேலும் சிறந்த மருத்துவமனை, மருத்துவர்களை கொண்டு சிகிச்சை மேற்கொள்வதால் அவர்கள் விரைவில் குணமடைந்து தாய் நாட்டிற்கு செல்லலாம் எனவும் டயா பூஸ்டர் எவ்வித பக்க விளைகளை ஏற்படுத்தாது சர்க்கரை நோயால் ஏற்படும் புன்களை விரைவில் குணபடுத்தும் தன்மை கொண்டதும், மருத்துவர்கள் இதனை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்வார்கள் என தெரிவித்தார்.