மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார் ,
கடத்தூர்-
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த தாளநத்தம் ஊராட்சி சமுதாய கூட திருமண மண்டபத்தில் , தாளநத்தம் மற்றும் கேத்தி ரெட்டிப்பட்டி ஊராட்சிச் சேர்ந்த பொது மக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது , இதில் வருவாய்த்துறை மகளிர் உரிமைத் தொகை . தாட்கோ’ கலைஞர் வீடு வழங்கும் திட்டம் . வேளாண்மை துறை , உள்ளிட்ட துறைகளில் 1598 , மனுக்கள் பெறப்பட்டது
அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர் இந்த முகாமில் , தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்
அப்போது ஊனமுற்றோர் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு முக்கியத்துவம் அளித்து , உடனடியாக சேவை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் , இதில் BDO, சுருளிநாதன் தாசில்தார் செந்தில் , ஊராட்சி செயலாளர் ஞானம் , உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்றனர் ,