துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் இயற்கை மருத்துவ முகாம் நடைபெற்றது. துறையூர் ரோட்டரி சங்க வளாகத்தில் 31/07/2025 அன்று இமயம் இயற்கை மருத்துவமனை மற்றும் துறையூர் ரோட்டரி சங்கம் இணைந்து மாபெரும் இலவச இயற்கை மருத்துவம் முகாம் நடைபெற்றது.
துறையூர் ரோட்டரி சங்கத் தலைவர் இ. ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், செயலாளர் பாஸ்கர், பொருளாளர் இளங்கோவன், சேவை திட்ட இயக்குநர் தியாகராஜன்,இமயம் கல்லூரி நிர்வாக இயக்குநர் ஜனார்த்தனன் ஆண்டி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
முகாமில் மருத்துவர்கள் திருமுருகன், சோபிகா, அபிராமி, ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியம் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு இடுப்பு வலி, மூட்டு வலி, சர்க்கரை நோய் ,உடல் பருமன், மாதவிடாய் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இயற்கை மருத்துவ முறையில் இலவசமாக பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.
இதில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.இதற்கான ஏற்பாடுகளை மருத்துவ திட்ட இயக்குநர் எஸ்கேபி.ஸ்ரீதர் செய்திருந்தார்.இதில் சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்