கோவை
கோவையில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் அய்யாவாடி ஸ்ரீ ப்ரத்யங்கிராதேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி.புதூர் பிரிவில் ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு வக்ரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து அம்மனுக்கு அய்யாவாடி ஸ்ரீ ப்ரத்யங்கிராதேவி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.கோவை வக்ரகாளி சேவா ட்ரஸ்ட் சார்பில் சிவஸ்ரீ ஞானசேகர சிவாச்சா ரியார் தலைமையில் நடைபெற்ற பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிக்குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டுக்கான 14-வது ஆடிக்குண்டம் திருவிழா வரும் ஆக்ஸ்ட் 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது