கரூர் மாவட்ட செய்தியாளர் மதியான்பாபு
கரூரில் முன்னாள் அமைச்சரும்,கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி
“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் 45 பயனாளிகளுக்கு ரூ. 44.71 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்…
கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி. செந்தில்பாலாஜி கரூர் வட்டம், ஆத்தூர் பூலாம்பாளையம் சமுதாயக் கூடம், கரூர் மாநகராட்சி, பசுபதிபாளையம் தனியார் திருமண மண்டபம் மற்றும் பஞ்சமாதேவி நவஜீவன் பள்ளி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்களில் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் இ.ஆ.ப., தலைமையில் 45 பயனாளிகளுக்கு ரூ. 44.71 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் கரூர் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்ததாவது,தமிழ்நாட்டில் “உங்களுடன் ஸ்டாலின்” எனும் சிறப்பு திட்ட முகாம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் 179 முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு, இதுவரை 36 முகாம்கள் நடந்து முடிவடைந்துள்ள நிலையில் மொத்தம் 28,318 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றுள்ளன.
சில மனுக்களுக்கு அன்றைய தினமே தீர்வு காணப்படுகிறது. ஒரு சில மனுக்களுக்கு ஒரு வார காலம் எடுத்துக்கொள்ளப்பட்டு அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து பதிலளிக்கப்படும். அதிகபட்சம் 45 நாட்களுக்குள் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு கரங்களில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் எனும் உறுதியளிக்கப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வீட்டுமனைப் பட்டாக்கள் இன்றி வாழும் பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குவதற்காக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 28,000 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க இழக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 45,000 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
வீட்டுமனைப் பட்டாக்கள் பெற்ற தாய்மார்கள், பெரியோர்கள் இத்தனை ஆண்டுகளாக எண்ணற்ற மனுக்கள் அளித்தும் கிடைக்காத பட்டா தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சியில் கிடைத்திருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் வீட்டுமனைப் பட்டா பெற்ற பொதுமக்கள் தங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், மேலும் நடைபெற்று வரும் பணிகள் முழுமையாக நிறைவடைவதற்கு தேவையான நிதிகைளையும் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி வருகிறார்கள்.
கரூர் ஒன்றியம் வளர்ச்சியடைந்த ஊராட்சி ஒன்றியமாக, அதிலும் குறிப்பாக ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சி மாவட்டத்தில் முதல் நிலை ஊராட்சியாக செயல்பட்டு வருகிறதென மரியாதைக்குரிய கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.
செந்தில்பாலாஜி வழங்கினார்.
இதனைத்தொடர்ந்து கூட்டுறவுத்துறையின் சார்பாக 3 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 31.60 இலட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளும், 4 விவசாயிகளுக்கு ரூ.8.01 இலட்சம் மதிப்பீட்டில் பயிர்க் கடனுதவிகளும், 5 விவசாயிகளுக்கு ரூ. 5.10 இலட்சம் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடனுதவிகளும், எரிசக்தித் துறையின் சார்பாக 3 நபர்களுக்கு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான ஆணைகளையும், வருவாய்த் துறையின் சார்பாக 20 நபர்களுக்கு இருப்பிடச் சான்று, இறப்புச் சான்று, சாதிச்சான்று, பட்டா மாறுதல், வாரிசு சான்று மற்றும் வருமானச் சான்று உள்ளிட்ட சான்றிதழ்களையும்,மாநகராட்சியின் சார்பாக 8 நபர்களுக்கு சொத்துவரி பெயர் மாற்றத்திற்கான ஆணைகளையும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 2 நபர்களுக்கு காதொலி கருவி, ஊன்றுகோல், கண் கண்ணாடி மற்றும் மடக்குக்குச்சி உள்ளிட்ட உதவி உபகரணங்கள் என மொத்தம் 45 நபர்களுக்கு ரூ. 44.71 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மரியாதைக்குரிய கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி வழங்கினார்.
இம்முகாமில் மாநகராட்சி மேயர் வெ. கவிதா, மாவட்ட வருவாய் அலுவலர் ம. கண்ணன், மாநகராட்சி ஆணையர் கே.எம். சுதா, துணை மேயர் ப. சரவணன், வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல், வட்டாட்சியர்கள் மோகன்ராஜ், குமரேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.