கமுதி அருகே புதிதாக மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த பொதுமக்கள்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள மண்டலமாணிக்கம் கிராமம் குண்டாற்றின் கரையில் அமைந்துள்ளது. தற்போது அப்பகுதியில் அரசு மணல் குவாரி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து நேற்று மண்டலமாணிக்கம் கிராம பொதுமக்கள் கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் தங்கள் கிராமத்திற்கு மணல் குவாரி வரக்கூடாது என மனு அளித்தனர்.
தங்கள் ஊருக்கு மணல் குவாரி வந்தால் குடி தண்ணீர், விவசாயம் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என வலியுறுத்தி உள்ளனர்