தூத்துக்குடி சிவன்கோவில் ஸ்ரீ துர்க்கை 54 வது ஆண்டு விழா அமைச்சர் கீதாஜீவன் திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தார் தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ துர்க்கை அம்பிகை 54 வது ஆண்டு விழா நடைபெற்றது.

ஆடி மாதம் 15 ம் தேதி இரவு 6.30 மணி முதல் 7.30 மணிவரை ஊஞ்சல் உற்சவம் தீப பூஜை நடைபெற்றது. 16ம் தேதி காலை 8.30 மணியளவில் விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், கும்பபூஜை, துர்க்கா ஸூக்தம் ஜெபம், மற்றும் காலை அபிஷேகம், கும்பாபிஷேகம், நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இரவு நடைபெற்ற 216 திருவிளக்கு பூஜையை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சருமான கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையை தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். முன்னதாக விநாயகர், சங்கரராமேஸ்வரர், பாகம்பிாியாள், சன்னதியில் தாிசனம் செய்தார்.

திருவிளக்கு பூஜையில் சிவன்கோவில் நிர்வாக செயல்அலுவலர் தமிழ்செல்வி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், அறங்காவலர் குழு தலைவர்கள் கந்தசாமி, செந்தில்குமார், தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மந்திரமூர்த்தி, ஆறுமுகம், ஜெயலட்சுமி, சாந்தி, பாலசங்கர், பாலகுருசாமி, கோபால், மாவட்ட பிரதிநிதி சக்திவேல், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், கோவில் கணக்கர் சுப்பையா, மற்றும் மணி, வேல்பாண்டி, மாாிமுத்து, அல்பட், ஸ்ரீ ஜலதுர்க்கா வார வழிபாடு அமைப்பாளர் ஜெயராணி, செயலாளர் பெத்தனாட்சி, பொருளாளர் விஜயா, மற்றும் நிர்வாகிகள் அனுராதா, சாரதா, பொன்னி, சுமதி, ராஜபுஷ்பம், பிச்சம்மாள், ஜெயந்தி, ஜெயலட்சுமி, துர்கா, அனுதேவி, சந்திரலேகா, அலமேலு, இசக்கிஅம்மாள், பாலச்சந்திரா, மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *