தஞ்சாவூர் டெல்டா மண்டல இளைஞர் அணி கூட்டத்தில் த.மா.கா தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜிகே வாசன் பங்கேற்கிறார்.டெல்டா மண்டல இளைஞரணி தலைவர் ஆர்..திருச்செந்தில் அறிவிப்பு…
தஞ்சாவூர் மாநகரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் டெல்டா மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் மாநில கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர் .எஸ் சுரேஷ் மூப்பனார் தலைமையில் ஆகஸ்ட் 9 -ல் பிரம்மாண்டமாக மாநிலக்கூட்டம் நடக்கிறது.
“இதனையொட்டி தஞ்சை புதிய பேருந்து நிலையம் பி எல் ஏ மஹாலில் நடைபெறுகிறதுமாநிலக்கூட்டத்தில் தா.மா.கா தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜிகே வாசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
இந்நிகழ்ச்சியில் டெல்டா மண்டலத்திற்குட்பட்ட 37 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலத் துணைத் தலைவர்கள் மாநில பொதுச் செயலாளர்கள், மாநில செயலாளர்கள் இணைச் செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள் துணை அமைப்பை சேர்ந்த மண்டல தலைவர்கள், மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் மாவட்ட இளைஞர் அணி தலைவர்கள், மாநகர வட்டார நகர பேரூர் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள் .
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டெல்டா மண்டல இளைஞரணி தலைவர் திருச்செந்தில் தலைமையில், மண்டல மற்றும் மாவட்ட இளைஞரணி தலைவர்கள் செய்து வருகின்றனர்.