விருதுக்காக எடுக்க படம் குறும்பட பூஜை” மதுரை காந்தி மியூசியம் அருகில் உள்ள பார்க் முருகன் கோவிலில் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா தலைமையிலும், நடிகர் மீசை மனோகரன், நடிகர் அப்பா பாலாஜி, நடிகர் மீசை அழகப்பன், நடிகை மல்லிகா முன்னிலையிலும், சிறப்பு விருந்தினராக அகஸ்தியர் ஹெர்பல் நாகலிங்கம் அவர்கள் நீங்கள் எடுக்கும் குறும்படம் விருது பெறும் வி 3 கிரியேஷன்ஸ் – ஐ தொடங்கி வைத்து வாழ்த்துக்கள் கூறினார்.
எழுத்தாளர் சுந்தரபாண்டி, தமிழ் திரை கலைஞர்கள் நல சங்கம் தலைவர் சுப்புராஜ், அறிமுக நடிகர் செளந்தர பாண்டி, நடிகர் வைத்தியலிங்கம் வாழ்த்துரை வழங்கினார்கள். விழாவில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், எழுத்தாளர் விவேக் ராஜ், எழுத்தாளர் விமல், கல்லூரி மாணவி லாவண்யா, நடிகை ரிஷிதா, குழந்தை நட்சத்திரம் லியானா மற்றும் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள், தேநீர் வழங்கப்பட்டது.