கே வி முகமது அரியலூர் செய்தியாளர்:
அரியலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் 55 ஆம் ஆண்டு விழா
சிறப்பாக நடந்தது அரியலூர் பி என் எம் திருமகள் திருமண மண்டபத்தில் நடந்தது சங்கத்தின் 55 ஆம் ஆண்டு விழா 80 வயது நிறைவு செய்த உறுப்பினர்களை கௌரவப்படுத்துதல் மற்றும் சங்கப் பொதுக்குழு கூட்டம் ஆகியவைகள் இணைந்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது
விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் சங்கத்தின் துணைச் செயலாளர் அரியலூர் நல்லப்பன் வரவேற்று பேசினார் சங்கத் தலைவர் சிவசாமி விழாவிற்கு தலைமை தாங்கினார் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க தலைவர் ஓய்வூதியர்சேவைசெம்மல் மாணிக்கம் சிறைப்புரையாற்றினார்
நல்லத்தம்பி ஆண்டு அறிக்கை வாசித்தார் குடியரசன் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார் தமிழ்ச்செல்வன் தீர்மானங்களை விளக்கி பேசினார் அரியலூர் மாவட்ட கருவூல அலுவலர் த சிவகுமார் முன்னிலை வகித்தார் துணைத்தலைவர் புலவர் இளங்கோ மாணிக்கம் ராமசாமி முத்துக்குமரவேலு இரா மருதமுத்து ராஜவேல் சிதம்பரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்
திருநாவுக்கரசு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் மகாலிங்கம் அனைவருக்கும் நன்றி கூறினார் செயல் தலைவர் புலவர் வடமலை சங்க கொடியை ஏற்றி வைத்தார் தேர்தல் அறிக்கையில் உள்ளபடி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு 70 வயது நிறைவு பெற்றவர்களுக்கு 10% ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது