கொய்யாவை ஏழைகளின் ஆப்பிள் என்பார்கள். கொய்யா அதிக சத்துக்கள் நிறைந்த பழம். இதில் வைட்டமின் சி, லைகோபீன், ஆண்டிஆக்சிடென்ட் போன்றவை நிறைந்துள்ளன.

விவசாயத்தில் ஆர்வம் இருப்பவர்கள் பழ வகைகளை விளைவிப்பதில் அதிக கவனம் செலுத்துவதைப் பார்க்கமுடிகிறது. குறிப்பாக கொய்யா சாகுபடியைத் தேர்வு செய்தால் நல்ல லாபம் ஈட்டலாம் என்கின்றனர் விவசாயிகள். ஒரு ஹெக்டேர் நிலம் இருந்தால், ஆண்டிற்கு 25 லட்ச ரூபாய் வரை நீங்கள் சம்பாதிக்கலாம்.

இதில் 15 லட்ச ரூபாய் உங்கள் கையில் லாபமாக நிற்கும். தரமான விதைகளைத் தேர்வு செய்தால் அதிக மகசூல் பார்க்க முடியும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். கொய்யா வகைகள் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறம் என இரண்டு நிறங்களில் கொய்யா கிடைக்கின்றன.

அலகாபாத் சபேதா, சர்தார் கொய்யா, லக்னோ -49, லலித், அர்கா கிரண், அர்கா ரேஷ்மி என பல்வேறு கொய்யா வகைகளை விவசாயிகள் பயிரிடுகின்றனர். வெள்ளை கொய்யா மட்டுமின்றி சிவப்பு கொய்யாவிற்கும் சந்தை தேவை இருப்பதால் அனைத்து வகைகளும் பயிரிடுகின்றன.

விஎன்ஆர் வகை கொய்யாவைப் பயிரிட விரும்புவர்கள் ஒரு செடியை 180 ரூபாய் கொடுத்து வாங்கலாம். நல்ல நர்சரியில் செடிகளை வாங்கிக் கொள்ளலாம். மாநில அளவில் செயல்படும் வேளாண்மைதுறையைதொடர்பு கொண்டு செடிகளை வாங்கிக் கொள்ளலாம். கொய்யா சாகுபடி வெயில், மழை என எல்லா பருவகாலத்திலும் பயிரிட ஏற்றது கொய்யா. எந்த மாதமாக இருந்தாலும் சரி, சாகுபடியைத் தொடங்கி விடலாம். இருப்பினும், மிதமான குளிர் பகுதியில் அதிக மகசூல் கிடைக்கும்.

ஒரு முறை பயிரிட்டால் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வரை நல்ல விளைச்சல் கொடுக்கும். ஒரு வரிசையில் 8-8 அடி இடைவெளியில் கொய்யா செடிகளை நடலாம். ஒரு வரிசைக்கும் அடுத்த வரிசைக்கும் இடையில் 12 அடி இடைவெளி இருப்பது நல்லது. அடர் நடவு முறையால் நல்ல லாபம் ஈட்ட முடியும், குறைந்த இடத்தில் அதிக மகசூல் கிடைக்கும்.

பயிர்களுக்கு சரியான சத்துக்கள் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். பூச்சிக்கொல்லிகள் தெளித்து முறையாக பாதுகாத்தால் நல்ல லாபம் ஈட்டலாம். இப்படி ஒரு ஹெக்டேர் நிலத்தில் சுமார் 1200 செடிகள் வரை நடலாம். சொட்டு நீர் பாசன முறையைப் பின்பற்றி தண்ணீரையும் சேமிக்கலாம். விஎன்ஆர் பிஹி வரை கொய்யா இரண்டு ஆண்டுகளிலேயே பழம் கொடுக்க ஆரம்பித்து விடும்.

இதனால் இது விவசாயிகளிடையே மிகவும் பிரபலமாகி உள்ளது. செலவும் லாபமும் ஏற்கனவே குறிப்பிட்டது போல். கொய்யா செடிகளை பயிரிட்ட 2 ஆண்டுகளில் பழங்கள் கொடுக்கத் தொடங்கிவிடும். எனவே இரண்டு ஆண்டுகள் வரை பராமரிப்பு செலவுகள் இருக்கும். ஒரு ஹெக்டேர் நிலத்தில் பயிரிடுகிறீர்கள் என்றால், இரண்டு ஆண்டுகளுக்கு சுமார் 10 லட்ச ரூபாய் வரை செலவிட வேண்டியிருக்கும். ஒரு மாதத்தில் சுமார் 20 கிலோ வரை கொய்யா பழங்கள் கிடைக்கும்.

ஒரு கிலோவிற்கு சராசரி சந்தை விலை ரூபாய் 50. சில்லறையாக விற்பனை செய்தால் கிலோவிற்கு 80-100 ரூபாய் வரை கிடைக்கும். ஒரு செடியில் 20 கிலோ என்றால் 1200 செடிகளில் 24 டன் வரை கொய்யா பழங்கள் கிடைக்கும்.

கிலோ 50 ரூபாய் என்கிற விலையில் விற்பனை செய்யும் போது 25 லட்ச ரூபாய் கிடைக்கும். இதில் ஆண்டிற்கு 10 லட்ச ரூபாய் செலவாகும் என்று வைத்துக் கொண்டாலும் 15 லட்ச ரூபாய் லாபம் பார்க்க முடியும் என தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *