இன்னர் வீல் கிளப் ஆப் கோயமுத்தூர் சென்டெனரி (CENTENARY) சார்பாக உலக தாய்ப் பால் வார விழா
ஜனனி திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இதில்,கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு மற்றும் புத்தாடைகள் வழங்கி ,தாய்பாலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு தாய்ப்பாலின் முக்கியத்துவம் மற்றும் தாய்மார்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், உலக தாய்ப்பால் வாரம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை கடைபிடிக்கப்படுகிறது…
இந்நிலையில் இன்னர் வீல் கிளப் ஆப் கோயமுத்தூர் சென்டெனரி (CENTENARY) சார்பாக உலக தாய் பால் வார தின விழா காந்திபுரம் பகுதியில் உள்ள அரசு சுகாதார வளாகத்தில் நடைபெற்றது..
இன்னர் வீல் கிளப் ஆப் கோயமுத்தூர் சென்டெனரி தலைவர் தீபிகா விஜய்,,செயலாளர் மோனிகா,துணை தலைவர் ருத்வி ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற விழாவில்,இன்னர் வீல் கிளப் ஆப் கோயமுத்தூர் சென்டெனரி சார்டர்டு பெர்சன் கவிதா ரமேஷ்,மற்றும் பிரபல யோகா பயிற்சியாளரும் பரத நாட்டிய நடன கலைஞரும் ஆன சாரா சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்…
நிகழ்ச்சியில்,தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு எடுத்து கூறப்பட்டது..
குறிப்பாக முறையாக தாய்ப்பால் கொடுப்பது குறித்தும்,தாய்ப்பால் அதிகமாக சுரக்க எடுத்து கொள்ள வேண்டிய ஊட்ட சத்து உணவுகள் குறித்து மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர் மேலும் தாய்ப்பால் வங்கிகள் குறித்தும்,தாய்ப்பால் தானமாக வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது..
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில்,இளம் தாய்மார்களுக்கான பி.எஃப்.ஏ.எனும் குறும்பட ட்ரெய்லர் வெளியீடு செய்யப்பட்டது..
முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பிணி காலத்திற்கு தேவையான உடைகள்,பேரீச்சம் பழம்,உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய கிட் வழங்கப்பட்டது..
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கர்ப்பிணி பெண்களுக்கென பிர்த்யேக போட்டோ ஷூட் நடத்தப்பட்டது.இதில் கர்ப்பிணி பெண்கள்,பாலூட்டும் தாய்மார்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..