தமிழகத்தில் 13 தொகுதிகளில் மீனவ அமைப்புகளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும்-காளியம்மாள் பரபரப்பு பேட்டி
தூத்துக்குடியில் உலகப் புகழ்பெற்ற பணிமயமாதா ஆலய திருவிழா நடைபெற்று வருகிறது திருவிழாவின் முக்கிய பத்தாம் திருவிழாவான இன்று தேர்மாறன் அமைப்பின் சார்பில் காளியம்மாள் பனிமயமாதா ஆலயத்தில் நடைபெற்ற ஜெபத்தில் கலந்து கொண்டார்
அதன் பின்பு தேர்மாறன் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் கூறுகையில் தூத்துக்குடி சுற்றியுள்ள மக்களுக்கு இன்று நல்ல நாள் பணிமயமாதா ஆலய திருநாள் 2026 தேர்தல் விரைவில் வரவுள்ளது ஒவ்வொரு தேர்தலின் போதும் அரசியல் கட்சியினர் அவங்க கட்சியின் வெற்றியை பெற வேண்டும் என்பதற்காக மீனா மக்களின் வாக்குகளை பெற தொடங்கியுள்ளனர்
அரசியல் கட்சியினர் ஒட்டுமொத்தமாக வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி மண்ணிலிருந்து நான் சொல்வது நெய்தல் மக்களை புத்தக வடிவில் தான் மக்களின் அதிகாரம் உள்ளது அதையும் தாண்டி மக்களின் பிரச்சனை அதிகாரம் இதுவரைக்கும் எந்த தேர்தலிலும் இந்த மக்களுக்கு அதிகாரம் இல்லை இதுவரை கடலோர மக்களுக்கு அவளுடைய உரிமை மறுக்கப்பட்டுள்ளது
கடலோர மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய நெய்தல் மக்களுக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் கடலோர மக்களுக்கு மீனவ அமைப்புக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் மக்களின் உரிமைக்காக அது இருக்க வேண்டும் தூத்துக்குடி திருச்செந்தூர் தொகுதியில் கடலோர மீனம் மக்களின் வாக்கு அதிகமாக உள்ளது தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மீனவ மக்கள் இருக்கின்றனர்
கடலோர மக்களுக்கு எந்த அரசியல் கட்சி வாய்ப்பு வழங்குகிறதோ அந்த அரசியல் கட்சிக்கு எங்களுடைய ஆதரவு உண்டு அந்த வேட்பாளருக்கு நாங்கள் ஆதரவு வழங்குவோம் எங்க வாழ்வின் அர்த்தம் தெரிந்தவராக இருக்க வேண்டும் மக்களுக்கு கடலோர மக்களுக்கு அதிகாரம் கொடுக்கக் கூடிய வேட்பாளராக இருக்க வேண்டும் இதுவரை சாமானிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய சாதாரண உரிமை கூட கிடைக்கவில்லை நெய்தல் மக்களின் உழைப்பு தான் அரசின் வருமானத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் மீனவ மக்களை எந்த கணக்கில் வைப்பீர்கள் என்பதை நான் கேள்வி கேட்க வேண்டிய நிலையில் உள்ளேன் எந்தெந்த சமூகத்தை மீனவர்கள் என்று சேர்ப்பீர்களா அல்லது பரதர் சேர்ப்பீர்கள் என்பதையும் அரசு விளக்க வேண்டும் கடலோர மக்களை எந்த இடத்தில் வைக்க போகிறீர்கள் என்பதை என்பதை தெரிவிக்க வேண்டும் எந்தெந்த தொகுதியில் கடலோர மக்களின் வாக்கு அதிகமாக உள்ளதோ அந்த தொகுதியில் மீனவ கலை நிறுத்த வேண்டும் தமிழகத்தில் கடலோர மாவட்டம் 13 அல்லது 14 சட்டமன்ற தொகுதியில் மீனவ மக்களை வேட்பாளராக நிறுத்த வேண்டும் மீனவ மக்கள் அவர்களுக்கான மீன்பிடித் துறைமுகம் கேட்டால் வாய்ப்பு வழங்குவது கிடையாது
மக்களின் கோரிக்கை நிறைவேற்றுவது கிடையாது தனியார் துறைமுகங்கள் கடற்கரைப் பகுதியில் அமைப்பது மிகவும் தவறான செயலாகும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழிக்கும் செயலாகும் கடலோர மக்களை அப்புறப்படுத்துவதற்கான செயலாகும் மத்திய அரசு ஒரு மோசமான திட்டத்தை கொண்டு வந்தால் அதனை தமிழக அரசு எதிர்க்கிறது ஆனால் இதில் ஏன் மௌனம் காத்து வருகிறது கடற்கரைப் பகுதியை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதும் துறைமுகங்கள் அமைப்பதும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் சிதைக்கும் செயலாகும்மனப்பாடு பகுதியில் பாரம்பரிய புனிதமான தேவாலயம் உள்ளது அந்த இடம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய இடம் அந்த மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் சிதைக்கும் வகையில் அங்கு ஒரு பாலம் அமைக்கப்பட்டுள்ளது
மீனவ இனத்திலிருந்து ஒரு அமைச்சர் நியமிக்கப்பட வேண்டும் ஆனால் இந்த திமுக அரசு மீன்வளத்துறை என்று ஒன்று உள்ளது ஆனால் அந்தத் துறைக்கு அமைச்சர் மீனவர்களை சேர்ந்தவர் இல்லை மீனவ மக்களுக்கு அடிப்படை வசதிகள் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் அரசியலுக்கு வந்தேன் நான் அதிகாரம் பெற வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வரவில்லை எந்த அரசியல் கட்சி மீனவ அமைப்புக்கு ஆதரவு அளித்தாலும் வேட்பாளராக நிறுத்தினாலும் நான் ஆதரவு உண்டு தூத்துக்குடி தொகுதியில் நீங்கள் போட்டியிடுவீர்களா என்று காளியம்மாளிடம் கேட்டபோது அது இந்த அமைப்புகள் ஒன்று கூடி முடிவு செய்வார்கள் அதன் அடிப்படையில் எனது முடிவு இருக்கும் என்று காளியம்மாள் செய்தியாளர்களிடம் கூறினார்