ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், நிறுவனர் திருமாவளவன் அக்கா, பானுமதியின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானா பகுதியில், மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், மாவட்ட ஊடக மைய அமைப்பாளர் சுரேஷ் செங்கோடன், அந்தியூர் தொகுதி செயலாளர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலையில், ஒன்றிய செயலாளர் சிறுத்தை தங்கராசு தலைமையில் நடந்த நிகழ்வில், பானுமதியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து, வீரவணக்கம் செலுத்தினர்.
இதில், மாநில விவசாய அணி துணை செயலாளர் ஜம்பை பழனிச்சாமி, அம்மாபேட்டை ஒன்றிய துணை செயலாளர் அருண்குமார், அம்பேத்கர் மக்கள் இயக்கம் மாநில செயலாளர் கண்ணன், மகளிர் அணி பொறுப்பாளர்கள் கீதா, சபீரா பேகம், பொறுப்பாளர்கள் பிரேம் ஆசிரியர் சந்தானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.