கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை நகராட்சி 22 வார்டுகளை கொண்டது, இங்கு தி.மு.க.வை சேர்ந்த உஷா வெங்கடேஷ் என்பவர் நகர சபை தலைவராக உள்ளார்.
இந்நிலையில் நகராட்சியில் அனைத்து ஒப்பந்த புள்ளிகள் மற்றும் சாலை வசதி தெருவிளக்கு அமைத்தல் கழிவுநீர் கால்வாய்கள் கட்டுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் ஊழல் நடைபெறுவதாகவும் இதனால் எந்த பணிகளும் சரிவர நடைபெறாமல் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி இருப்பதாகவும் கூறி கோவை புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் பி. ஆர். ஜி அருண்குமார் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ் காரமடை நகராட்சி முன்னாள் தலைவர் ஆறுமுகசாமி உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க நிர்வாகிகளும் கட்சியினரும் உள்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.