திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைத்தெரு வாசு திருமண மண்டபத்தில் வலங்கைமான் அரசு பள்ளியில் 1975-78 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் வருகின்ற 05.09.2025 வெள்ளிக்கிழமை ஆசிரியர் தினத்தன்று நமக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களை அழைத்து அவர்களை கெளரவப்படுத்துவது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள் கனகராஜன், சேகர், பழனிவேல், தெட்சிணாமூர்த்தி, இளங்கோவன், மோகன் குமார், ஜெயராஜ், இளங்கோவன், குணசேகரன், மதியழகன் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.