கல்லூரிஅஞ்சல் தலை சேகரிப்போர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி!
திருச்சிராப்பள்ளி பிஷப்ஹீபர் தன்னாட்சி கல்லூரி விரிவாக்க துறை சார்பில் கல்லூரி மாணவர்கள் அஞ்சல் தலை சேகரிப்போர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி கல்லூரி நிர்வாக கட்டிட வளாக மூன்றாம் தளத்தில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி பிஷப்ஹீபர் தன்னாட்சி கல்லூரி விரிவாக்க துறை கல்விப் புல் முதன்மையர் முனைவர் ஆனந்த் கிடியோன் தலைமை வகித்தார். திருச்சிராப்பள்ளிக் பிளாட்டலிக் கிளப் நிறுவனர் நாசர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
திருச்சிராப்பள்ளிக் பிளாட்டலிக் கிளப் தலைவர் லால்குடி விஜயகுமார், செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி மாணவர்கள் பிளாட்டலிக் கிளப் தலைவராக தேவ மித்ரா துணைத்தலைவராக ஆபிலா பரீன் செயலராக பவதாரணி இணைச் செயலாளராக அபிநயா பொருளாளராக வெங்கடேசன் உள்ளிட்டோர் , கல்லூரிபிளாட்டலிக் கிளப் உறுப்பினராக எனக்கு ஒப்படைக்கப்பட்ட மதிப்புகளையும் பொறுப்புகளையும் பாதுகாப்பேன். நேர்மையுடன் பணியாற்றுவேன்,அஞ்சல் கலை சேகரிப்பினை ஊக்குவிப்பேன், அஞ்சல் கலை அறிவைப் பகிர்வதையும் படைப்பாற்றலையும் ஊக்குவிப்பேன்,என் சக உறுப்பினர்களுடன் ஒருமைப்பாட்டுடன் பணியாற்றுவேன்.
தபால் பாரம்பரியத்தின் பெருமையை மதிப்பேன்,எங்கள் கழக நிகழ்வுகளில் சிறந்த முறையில் பங்கேற்பேன்,எங்கள் நிறுவனத்தின் பொறுப்பான பிரதிநிதியாக இருப்பேன். எனது முழுமையான ஒப்புதலுடன் இந்த பொறுப்பை ஏற்கிறேன் என உறுதிமொழியேற்று பதவியேற்றனர். முன்னதாக கல்லூரி பிளாட்டலிக் கிளப் ஒருங்கிணைப்பாளர்களும் உதவி பேராசிரியருமான எல்டைன் ருபெல்லா வரவேற்க, நிறைவாக கேண்டிஸ் தீப்தி நன்றி கூறினார்.