பிராமண நல்வாழ்வு முன்னேற்றம் என்ற கொள்கைக்காகவும் , ‘பிறர் முன்னேற்றமே தமது உயர்வு ‘ என்ற நோக்கத்துக்காகவும், கோவையைச் சேர்ந்த தொழில் முனைவோரால் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது ‘க்ளோபல் பிராமிண் வெல்ஃபேர் ஃபோரம்’ (GBWF) அமைப்பு இந்நிலையில் இவ்வமைப்பின் ‘முப்பெரும் விழா 2025’ கோவை ராம் நகரில் அமைந்துள்ள ‘சுபஶ்ரீ ஹாலில்’ நடைப்பெற்றது.
குழு உறுப்பினர்களை ஊக்கப்படுத்தவும், தன்னலம் பாராமல் சமுதாய நலனுக்காய் இடையிராது பாடுபடுவோரில் தேர்ந்தெடுக்கப்பட்டவரை கௌரவிக்கும் விதமாகவும், பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவ மாணவியருக்கு உதவும் பொருட்டும் ஆகிய மூன்றயும் இணைத்து ‘முப்பெரும் விழா 2025’ கொண்டாடப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக சங்கர் ஐகேர் “நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ஆர்.வீ்.ரமணி தலைமை விருந்தினராய் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் , சுற்றுச்சூழல் பாதுகாப்பை தன் மூச்சாக கொண்டு தொண்டாற்றும் சமூகத்தொண்டர், வள்ளல் மற்றும் க்ரீன் ‘லா’ நிறுவனத்தின் முதன்மை அதிகாரி தொழில் முனைவோரான அவினாஷ் நாராயண்ஸ்வாமிக்கு GBWF-ன் சார்பாய் ‘சுற்றுச்சூழல் தொலைநோக்கு முன்னோடி’ என்ற பட்டமும் கேடயமும் வழங்கி கவுரவிக்கப்பட்டார்..
கோடைக்காலத்தில் கோவைப் பொதுமக்கள் தாகம் போக்க சிவானந்தா காலனி, ஆர்.எஸ் புரம் ஆகிய இடங்களில் GBWFன் முன்னெடுப்பால் நடைபெற்ற ‘நூறு நாள் நீர் மோர் பந்தல் சேவை’ திட்டத்தில் தொண்டாற்றி தங்கள் நேரம், பொருளுதவி மற்றும் உடல் உழைப்பு நல்கிய குழு உறுப்பினர்கள் பாராட்டப்பட்டனர்..
தொடர்ந்து அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவ மாணவிய மணிகளுக்கு சீருடை, நோட்டுப்புத்தகம் மற்றும் கல்வி கட்டணப்பணம் ஆகியவை வழங்கப்பட்டன.
விழாவின் இறுதியாய் தன் ஒப்பற்ற செயல்திறனால் எண்ணற்றோருக்கு தன் சங்கரா கண் நிறுவனத்தின் மூலம் பார்வை அளித்து வரும் டாக்டர் ஆர்.வீ.இரமணி அவர்களுக்கு GBWF-ன் சார்பாக ‘நம்பிக்கை பார்வை’ என்ற பட்டம் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
வரவேற்புரையை GBWF-ன் தலைவர் CV கிருஷ்ணமூர்த்தி வழங்க, குழுவின் திட்டச் செயல்பாடுகளை செயலாளர் ராஜ்மோகன் விவரிக்க , பொருளாளர் கோவிந்த கிருஷ்ணன் நன்றியுரை ஆற்றினார்.