தஞ்சாவூர் மாவட்ட கும்பகோணம் அனைத்து ஹிந்து கூட்டமைப்பு சார்பில் இந்துக்களை இழிவாக பேசிய வழக்கறிஞர் ரமேஷ் -யை நடவடிக்கை எடுக்க கோரி மேற்கு காவல் நிலையத்தில் இன்று புகார் மனு அளித்தனர்.

அனைத்து ஹிந்து கூட்டமைப்பு சார்பில் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் இருந்து இந்து இயக்கங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று கண்டன கோஷங்கள் எழுப்பினர்.தொடர்ந்து மேற்கு காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர்.

புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது : கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் பகுதியில் குடந்தை கத்தோலிக்க துறவியர் பேரவை சார்பில் நடைபெற்ற சத்தீஸ்கர் மாநிலத்தில் கேரள கன்னியாஸ்திரிகளின் கைதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோவில் தாலுக்கா திருநறையூர் மேல தெருவை சேர்ந்த பீட்டர் மகன் வழக்கறிஞர் ரமேஷ் கும்பகோணம் மாநகரச் செயலாளர் திராவிட கழகம் அமைப்பை சார்ந்தவர் பேசுகையில் இந்துக்கள் வேசி மகன் என்றும் தேவர், வன்னியர், பறையன், பள்ளன் என ஜாதியின் பெயரில் இருப்பதைவிட கிறிஸ்தவர்களாகவோ, முஸ்லிமாகவோ, மதம் மாறி செல்வது பெருமைக்குரியது வரவேற்கத்தக்கது. என பேசி இந்து மதத்தையும் இந்துக்களையும் இழிவு படுத்துவது மட்டுமல்லாமல் கட்டாய மதமாற்றத்திற்கு தூண்டும் வகையில் பேசியது இரு சமூகத்தினரிடையே மத மோதல்களை உருவாக்கிடும் வகையிலும். கட்டாய மதமாற்ற பிரச்சாரத்திலும் ஈடுபட்டு சட்ட ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசி உள்ளார். இது தேச இறையாண்மைக்கு எதிரானது ஆகையால் புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தில் அவரை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளது.

சிவ சேனா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் பூக்கடை எஸ் ஆனந்த்,இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி, பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் வேதா செல்வம், வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட பொருளாளர் வேதம் முரளி, மாநகர தலைவர்கள் கணேசமூர்த்தி, நீலமேகம், இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் பாலா, தென்னிந்தியா பார்வர்டு பிளாக் கட்சி மண்டல செயலாளர் ரமேஷ், இந்து மகா சபா மாநில பொதுச் செயலாளர் ராம. நிரஞ்சன், உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு புகார் மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *