ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே செங்கப்படை அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் 7- வகுப்பு மாணவி நிவேதா ஸ்ரீ,
ஜீடோ சாம்பியன்ஷிப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று, திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
சாதனை படைத்த மாணவி நிவேதா ஸ்ரீ க்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மாணவியை பாராட்டி சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் பள்ளியின் தலைமையாசிரியர் ரமேஷ், உடற்கல்வி ஆசிரியர் கமலஹாசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மாணவியை பாராட்டி ஊக்கப்படுத்தினார்கள்