சென்னை செங்குன்றத்தில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செங்குன்றம் ரேலா மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதி வரை உலகஸதாய்ப்பால் வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் இருவருக்கும் தாய்ப்பால் கொடுப்பதன் ஆரோக்கியம் நன்மைகள் குறித்தும், பாலூட்டுதலில் முக்கியத்துவம் மற்றும் இயற்கையாக தாய்ப்பாலை குழந்தைகளுக்கு கொடுத்திட வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி செங்குன்றம் காவல் நிலையத்திலிருந்து பாடியநல்லூர் ரேலா மருத்துவமனை வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியை செங்குன்றம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் ரெலா மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.ராஜகோபாலன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இதில் ரெலா மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் பாலவாயல் ஆர்.பி. கோத்தி ஜெயின் மகளிர் கல்லூரி, ஜெ.என்.என். மகளிர் கல்லூரி மாணவியர்கள் 300க்கும் மேற்பட்டோர் தாய்ப்பால் ஊட்டும் அவசியத்தை வலியுறுத்தும் பதாகைககள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.