திருவொற்றியூர்,
வடசென்னை திருவெற்றியூரில் பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் உள்ளது
கோவில் உள்புறத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் மீன்கள், மற்றும் வாத்து வளர்ந்து வருகின்றனர். குளத்தில் கிடந்த மீன்கள் போதிய காற்று வசதி பற்றாக்குறையால் மீன்கள் செத்து மிதந்தன. இதனால் துர்நாற்றம் வீசியது.இதனைப் பார்த்த பக்தர்கள்
பொதுமக்கள் கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து கோவில் உதவி ஆணையர் நற்சோனை பிரம்ம தீர்த்த குளத்தை பார்வையிட்டார் குளத்தில் இறந்து கிடந்த சுமார் 300 கிலோ எடையுள்ள டேங் கிளினர் மீன் , பங்கஸ் மீன்களை மீனவர்கள் உதவியுடன் வலைகள் போட்டு மீன்களை அப்புறப்படுத்தினர்
மீன்கள் செத்து மிதப்பது குறித்து உதவி ஆணையர் நற்சோனை கூறுகையில் குளத்தில் அதிக அளவில் மீன்கள் இருப்பதால் காற்று பற்றாக்குறை காரணமாக மீன்கள் செத்து கிடப்பதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து குளத்தில் செத்து கிடந்த மீன்களை அப்புறப்படுத்தி தண்ணீரை வெளியேற்றி பிறகு நல்ல நீர் நிறப்பப்படும் என தெரிவித்தார் இதனால் ஊருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் என பக்தர்கள் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்