புதுச்சேரி மாற்றுத்திறனுடையோர் நலசங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு, புதுச்சேரி சார்பில் துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் அவர்களிடம் கிழ்கண்ட கோரிக்கைகள் தொடர்பாக நேரில் சந்தித்தனர்.
மேலும் இந்த சந்திப்பின்போது புதுச்சேரி அரசின் மாற்றுத்திறனாளிகள் மாநில ஆலோசனை குழு உறுப்பினர் ரௌத்திரம் சக்திவேல் சிறப்பு அழைப்பாளராக ஆளுநரை சந்தித்தார்.
- மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 ன் நோக்கங்களை நிறைவேற்றும் விதமாக XI79 Section, 80 ன் படி மாநில ஆணையம் அமைத்து ஆணையரை நியமனம் செய்திட வேண்டும் அதற்காக நமது அரசு 2011 ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டுள்ளது இந்த அரசாணையை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 Section 72 குறிப்பிட்டுள்ளபடி 2020 ஆம் ஆண்டு புதுச்சேரி அரசு (DISTRICT LEVEL COMMITTEE) மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் கமிட்டி ஒன்றையும் section 66ன்படிமாநில ஆலோசனை வாரியம் என்கிற ஒரு அமைப்பையும் அமைத்து அரசாணை வெளியிட்டது ஆனால் இன்றளவும் ஒரு கூட்டம் கூட கூட்டப்படவில்லை ஆகவே அந்த கமிட்டியை மறு பதிவு செய்து (Re constitution) அரசாணை வெளியிட வேண்டும்.
- சமூக பாதுகாப்பு திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு 25% கூடுதலாக உதவி வழங்க வேண்டும் என்கிற 2020ம் ஆண்டின் அரசாணை அனைத்து துறைகள் மூலமாகவும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
- அனைத்து அரசு கட்டிடங்களில் மற்றும் பொது கட்டிடங்களிலும் கடற்கரைகள் ஆலயங்கள் மற்றும் சுற்றுலா தளங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற சூழலை உருவாக்கிட வேண்டும்.
- அனைத்து அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக காண்ட்ராக்டில் வேலை செய்யக்கூடிய மாற்றுத்திறன் உடையவர்களுக்கு நிரந்தர பணி ஆணை வழங்க வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் அவர்களிடம் அளிக்கப்பட்டது.
.