செங்குன்றம் செய்தியாளர்
மாதவரம் பொன்னியம்மன்மேடு தணிகாசலம் நகரில் உள்ள கருமாரியம்மன் கோயில் 37 ஆம் ஆண்டு ஆடித்திருவிழாவை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.
புகழ்பெற்ற இந்த கோயிலில் 500 க் ற்கும் மேற்பட்ட ஆண்கள்,பெண்கள் பாலாஜி நகர் வினாயகர் ஆலயத்தில் இருந்து பால்குடம் மற்றும் முளைப்பாரியை சுமந்து ஊர்வலமாக எடுத்து சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
அதன் பின் சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க அம்மனுக்கு ஆராதனை நடைபெற்றது. இறுதியாக அன்னதானம் வழங்கப்பட்டது.
இக்கோயிலில் தலைவர் வழக்கறிஞர் ஜே காமேஷ் , செயலாளர் வெங்கடகிருஷ்ணன் ,பொருளாளர் குணாளன் மற்றும் நிர்வாகிகள் நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.