புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டி நடுநிலைப்பள்ளிக்கு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பேராசிரியர் அன்பழகன் விருது பெற்றதற்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூ.சண்முகம் அவர்களிடம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிகழ்வில் திருவப்பூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ராஜூ, கந்தர்வக்கோட்டை வட்டாரக் கல்வி அலுவலர் மெக்ராஜ் பானு,பள்ளி துணை ஆய்வாளர் வேலுச்சாமி,அரசு உயர்நிலைப்பள்ளி வெள்ளாளவிடுதி பொறுப்பு தலைமை ஆசிரியர் முத்துக்குமார் அக்கச்சிப்பட்டி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர்கள் செந்தில், கார்த்திகேசன் ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனர். கடந்த மாதம் பள்ளிக்கல்வி துறையின் சார்பில் திருச்சி தேசிய கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அண்ணா தலைமைத்துவ விருது, பேராசிரியர் அன்பழகன் விருது, கற்றல் அடைவுகளுக்கான 100 சவாலில் பங்கேற்ற பள்ளிகளுக்கு பாராட்டு உள்ளிட்ட முப்பெரும் விழா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான பேராசிரியர் அன்பழகன் விருதுனை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு அவர்களும் வழங்கி பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.